அரச ஊழியர்களின் சம்பளம் - வரலாற்றிலேயே முதல் தடவை ஏற்பட்டுள்ள சிக்கல்

Government Employee Sri Lanka
By Kiruththikan Jan 18, 2023 07:00 AM GMT
Report

வரலாற்றிலேயே முதல் தடவையாக அரச ஊழியர்களுக்கான மாதாந்த சம்பளத்தை குறிப்பிட்ட தினத்துக்குள் செலுத்த முடியாது போயுள்ளதாக போக்குவரத்து, பெருந்தெருக்கள் அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான பந்துல குணவர்த்தன நேற்று (17) தெரிவித்தார்.

நிறைவேற்று அதிகாரம் அல்லாத ஊழியர்களின் சம்பளத்தை குறிப்பிட்ட தினத்தில் செலுத்துவதற்கு திட்டமிட்டிருந்த போதிலும் நிறைவேற்று அதிகாரிகளின் சம்பளத்தை செலுத்துவதற்கும் தாமதமாகியுள்ளதாக தெரிவித்தார்.

அரச தகவல்கள் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிய தரும் கூட்டத்தில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.

திறைச்சேரிக்கு 147 பில்லியன் ரூபாய்

அரச ஊழியர்களின் சம்பளம் - வரலாற்றிலேயே முதல் தடவை ஏற்பட்டுள்ள சிக்கல் | Government Employee Government Staffs Salary

நாட்டின் அத்தியாவசிய செலவுகளை மேற்கொள்வதற்கே இலங்கை அரசாங்கத்துக்கு முடியாதுள்ளதென தெரிவித்துள்ள அமைச்சர் பந்துல குணவர்தன நிதி நடவடிக்கைகள் முடிவடைந்த டிசம்பர் மாதத்தில் திறைச்சேரிக்கு வருமானமாக 147 பில்லியன் ரூபாய் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

 அதில் 88 பில்லியன் அரச ஊழியர்களின் சம்பளத்தை செலுத்துவதற்கும் ஓய்வூதிய கொடுப்பனவுகள் மற்றும் சமூர்த்தி கொடுப்பனவுகளுக்கு 30 பில்லியனும் உரத்தைப் பெற்றுக் கொள்ள 6.5 பில்லியனும் சுகாதார அமைச்சுக்கு அத்தியாவசியமான மருந்து வகைகளுக்காக 8.7 பில்லியனும் ஏனைய செலவுகளை உள்ளடக்கி 154 பில்லியன் செலவு செய்யப்பட்டுள்ளது.

திறைசேரியின் வருமானம் 147 பில்லியன் ஆக இருந்தபோதும் செலவு 154 பில்லியன் என்றால் அந் நிலைமையை எவ்வாறு முகாமைத்துவம் செய்வது ? என்ற கேள்வி எழுமென சுட்டிக்காட்டிய அமைச்சர், இந்த நிதி வெளிநாட்டுக் கடன் மற்றும் வட்டியை செலுத்துவதற்கு செலவிடப்பட்ட தொகையை உள்ளடக்காமலேயே கணக்கிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

அதற்காக டிசம்பர் மாதத்தில் 182 பில்லியன் செலவிடப்பட்டுள்ளது. அரச வைத்தியசாலைகளுக்கு அத்தியாவசிய மருந்துகளை பெறுவதற்காக 10 பில்லியன் ரூபாவை பெற்றுத் தருமாறு சுகாதார அமைச்சர் அமைச்சரவையில் கோரிக்கை விடுத்திருந்தாலும் அதற்கான பணத்தைப் பெற்றுக் கொடுக்க திறைசேரியிடம் பணம் இல்லயென்றும் தெரிவித்தார்.

அதற்கு மாற்று வழியாக வரவு செலவு திட்டத்தின் மூலம் அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து 1% கவீதத்தை குறைத்து அந்நிதியை பெற்றுக் கொடுக்குமாறு அமைச்சரவைக்கு ஆலோசனை வழங்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அமைச்சுக்களுக்கான ஒதுக்கீட்டிலிருந்து 5% 

அரச ஊழியர்களின் சம்பளம் - வரலாற்றிலேயே முதல் தடவை ஏற்பட்டுள்ள சிக்கல் | Government Employee Government Staffs Salary

அதிபரின் உத்தரவுக்கமைய கடந்த அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சுக்களுக்கான ஒதுக்கீட்டிலிருந்து 5% ஐ வெட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்த 1வீதத்துடன் மொத்தமாக 6% வீத ஒதுக்கீடுகள் வெட்டப்படும். ஓய்வூதிய கொடுப்பனவுகள் 2000ஆம் ஆண்டு 152 பில்லியன், 2005ஆம் ஆண்டு 185 பில்லியன், 2010ஆம் ஆண்டு 478 பில்லியன் என அதிகரித்ததாக குறிப்பிட்டார்.

இந்த அமைச்சரவையில் மின்வலுமற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர மின் கட்டண பட்டியல் தொடர்பாக பொதுமக்கள் பயன்பாடுகள் ஆணைக்குழு இதுவரை உடன்பாட்டுக்கு வரவில்லை என்றும் தெரிவித்தார்.

மின் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பாக அமைச்சரவை பத்திரம் கடந்த அமைச்சரவையில் முன் வைக்கப்பட்ட வேளையில் அவருக்கு அமைச்சரவை , பொதுமக்கள் பயன்பாடுகள் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடி மின்கட்டண அதிகரிப்புத் தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்லுமாறு கூறப்பட்டது ஆனால் அதற்கு பதில் இதுவரை கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026