அரச ஊழியர்களின் சம்பளம் 20 ஆயிரத்தால் அதிகரிக்க வேண்டும் - அமைச்சர் நளின் வலியுறுத்தல்
இலங்கையில் அரச உத்தியோகத்தர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஜா – எல பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்துரைத்த போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்காலத்தில் அரச உத்தியோகத்தர்களின் சம்பளம் 20 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கப்பட வேண்டும்.
அதிகரிப்பதற்கான வேலைத்திட்டங்கள்
கடந்த கால பொருளாதார நெருக்கடியை அடுத்து அரச உத்தியோகத்தர்களின் சம்பளம் அதிகரிக்கப்படாமல் உள்ளது. எனினும் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ள நிலையில் சம்பளமும் அதிகரிக்கப்பட வேண்டும்.
அதனூடாக மக்களின் வருவாயை அதிகரித்து நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் நாட்டு மக்களின் வருவாயை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
