அரச ஊழியர்களை பணிக்கு அழைப்பது தொடர்பில் வெளியான புதிய சுற்றுநிருபம்!!
Sri Lanka Economic Crisis
Government Employee
Government Of Sri Lanka
Sri Lankan Peoples
Sri Lanka Fuel Crisis
By Kanna
அரச நிறுவனங்களின் செயற்பாடுகளை வீழ்ச்சியடையாது தொடர்ந்தும் மறு அறிவித்தல் வரை குறைந்தளவிலான பணிக்குழாமினரை அன்றாட சேவைக்கு அழைக்குமாறு அரச நிறுவன பணிக்குழாமினர்களை அறிவுறுத்தி சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கான சுற்று நிருபம் ஒன்று இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, நிறுவனங்களின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு தேவையான குறைந்தபட்ச ஊழியர்களை மாத்திரம் சேவைக்கு அழைக்குமாறு நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், இயன்ற வரையில் சேவையாளர்களை வீட்டில் இருந்தவாறே பணியாற்ற அனுமதிக்குமாறும் குறித்த சுற்றுநிருபம் மூலம் நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது
