அரச வேலைக்கு காத்திருப்போருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்
அரச சேவை, மாகாண அரச சேவை மற்றும் கூட்டுத்தாபனங்கள் மற்றும் சட்டரீதியான சபைகளுக்கு சுமார் 70,000 பேரை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது.
குறித்த விடயத்தை பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன (Chandana Abayarathna) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (19.11.2025) நடைபெற்ற பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் 2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு மசோதா மீதான குழு அமர்வுகளின் விவாதத்தின் போது அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
ஆட்சேர்ப்பு செய்வதற்கான அனுமதி
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், இந்த ஆட்சேர்ப்பு செய்யப்பட உள்ள அரச ஊழியர்களில் பட்டதாரிகளுக்கு அதிக எண்ணிக்கையிலான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

12,309 பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்
அரச சேவைக்குத் தேவையான ஆட்சேர்ப்பு மற்றும் அதன் தொடர்ச்சிக்கான பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்கான இடைக்கால நடவடிக்கையாக பிரதமரின் செயலாளர் தலைமையில் அரச சேவை ஆட்சேர்ப்பு மறுஆய்வுக் குழு நிறுவப்பட்டுள்ளது.
அந்தக் குழு அளிக்கும் பரிந்துரைகளை அமைச்சரவை பரிசீலித்து தேவையான ஆட்சேர்ப்புகளுக்கு அனுமதி வழங்கும் என்றும் சந்தன அபேரத்ன மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |