பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளல் : பிரதமரின் அறிவிப்பு
எதிர்காலத்தில் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்குவது குறித்து கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர், பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார்.
அதன்படி, இலங்கையின் ஆசிரியர் சேவை யாப்புக்கு இணங்க, நீதிமன்ற நடவடிக்கைகளும் அது தொடர்பான இறுதித் தீர்ப்பும் நிறைவடைந்த பின்னரே ஆசிரியர் நியமனங்கள் செய்யப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
பட்டதாரிகள் சங்கம் மற்றும் அகில இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் ஆகியவற்றுடன் நேற்று (18) கல்வி அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
நீதிமன்றச் செயல்முறை
அத்துடன் நீதிமன்றச் செயல்முறை முடிந்தவுடன், தற்போதுள்ள சட்டக் கட்டமைப்புக்குள் மட்டுமே அனைத்து நியமனங்களும் கட்டாயமாக மேற்கொள்ளப்படும் என்பதை பிரதமர் தெளிவுபடுத்தினார்.

ஆசிரியர் நியமனங்கள் தொடர்பான சில வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும், இதன் காரணமாகவே பட்டதாரிகளை ஆசிரியர்களாக இணைத்துக்கொள்வதில் தாமதம் ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.
you may like this
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |