விவசாயிகளிடம் உத்தரவாத விலையில் நெல் கொள்வனவு செய்யும் அரசு
விவசாயிகளிடமிருந்து அரசாங்கம் உத்தரவாத விலையின் அடிப்படையில் நெல் கொள்வனவு செய்யப்பட்டதாக நெல் விற்பனை சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் (Colombo) நடைபெற்ற ஊடகவியளாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், விவசாயிகளிடமிருந்து அரசாங்கம் 675 கிலோகிராம் நெல்லை கொள்வனவு செய்துள்ளது.
நெல் விற்பனை
மேலும், இன்னமும் நெல் விளைச்சல் அதிகளவில் சந்தைக்கு விநியோகம் செய்யப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
எதிர்வரும் நாட்களில் விவசாயிகள் அரசாங்கத்திடம் நெல்லை விற்பனை செய்வார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேலை விவசாயிகள் உர மானியங்களைப் பெற்றால், அவர்கள் தங்கள் அறுவடையில் ஒரு பகுதியை அரசாங்கத்திற்கு வழங்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தும் ஒரு சட்டத்தை வகுக்க அரசாங்கத்திடம் முன்மொழியப்பட்டுள்ளதாக கே.டி லால்காந்த தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)