தமிழருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் பதவி - புதிய ஆளுநர் நியமனம் விரைவில்!
Wickremesinghe Ranil
Government Of Sri Lanka
Senthil Thondaman
Eastern Province
By Dharu
ஆளுநர் பதவிகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க உத்தேசித்துள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.
அதன்படி, எதிர்வரும் மே மாதம் 2ஆம் திகதி புதிய ஆளுநர்கள் சிலரை நியமிக்கவுள்ளார் என கூறப்படுகின்றது.
இதன்போது, கிழக்கு மாகாண ஆளுநராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் நியமிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
மத்திய மாகாண ஆளுநர்
அத்துடன், மத்திய மாகாண ஆளுநர் பதவி முன்னாள் அமைச்சர் நவீன் திசாநாயக்கவுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அதன் பின்னர் ஏனைய மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
எனினும், தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் தற்போதைய ஆளுநர் பதவி வகிப்பவர்கள் அப்பதவியில் நீடிப்பார்கள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்