அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல் - இன்று முதல் நடைமுறை
Government Employee
Government Of Sri Lanka
Dollars
By pavan
ஜனவரி மாத ஓய்வூதிய கொடுப்பனவு தொடர்பில் நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தன புதிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.
இதன்படி, இம்மாதத்திற்கான ஓய்வூதியப் பணம் சம்பந்தப்பட்ட வங்கிக் கிளைகளுக்கு இன்று விடுவிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
திறைசேரியின் நிதி நிலைமை காரணமாக வங்கிக்கு பணம் விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
ஓய்வூதியத்துக்கான மாதச் செலவு
ஓய்வூதியத்துக்கான மாதச் செலவு 2,600 கோடி ரூபாய் என்றும் நிதி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், திறைசேரி தற்போது பாரிய நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாகவும் எனவே ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் அரச ஊழியர்களின் சம்பளம் வழங்குவதில் பாரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்