சடுதியாக குறைக்கப்பட்ட அரச செலவீனங்கள் - விசேட சுற்றறிக்கை வெளியீடு
Sri Lanka
Government Of Sri Lanka
Sri Lanka Government
By Kiruththikan
2023 ஆம் ஆண்டிற்காக ஒதுக்கப்பட்ட தொடர் செலவினங்களில் 6% குறைப்பு மற்றும் அரசாங்க செலவின முகாமைத்துவம் தொடர்பான சுற்றறிக்கை ஒன்றை நிதி அமைச்சு வெளியிட்டுள்ளது.
நிதி அமைச்சின் செயலாளர் அனைத்து அமைச்சின் செயலாளர்கள், மாகாண செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், அரச கூட்டுத்தாபனங்களின் தலைவர்கள், சட்ட சபைகள் மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களுக்கு இது தொடர்பான சுற்றறிக்கையை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான மாதாந்த செலவினத்தை விட அரசாங்கத்தின் வருமானம் தற்போது மிகவும் குறைவாக இருப்பதால் அரச செலவினங்களை மேலும் குறைக்க வேண்டும் என்று நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் அதிபர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சுற்றறிக்கை






ரணிலின் கைதும் இந்தியாவின் மௌனத்திற்கான பின்புலமும் 14 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்