கனேடிய தமிழர்கள் மீதான ஈர்ப்பை வெளிப்படுத்திய ஒன்டாரியோ முதல்வர்
கனடாவில் வாழுகின்ற தமிழ் மக்கள் மீது அதிக ஈர்ப்பு உள்ளதாக ஒன்டாரியோ முதல்வர் டக் ஃபோர்ட் (Doug Ford) தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் தமிழ் வர்த்தகர்களுடன் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழ் சமூகம் மீது தனக்கு மரியாதை உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழர்கள் பாரிய முன்னேற்றம்
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,கடுமையான உழைப்பு திறனை கொண்டமையே இதற்கு காரணமாகும். வெறும் கையுடன் கனடாவுக்கு வந்த பல தமிழர்கள் இன்று பாரிய முன்னேற்றம் அடைந்துள்ளனர்.
பல்வேறு தொழில் முயற்சிகளை மேற்கொண்டு முன்னேறியுள்ளனர். உணவகங்கள், வர்த்தக நிலையங்கள் என உருவாக்கி தொழில் துறையினை தமிழர்கள் வளர்த்துள்ளனர்.
தமிழ் மக்கள் மீது பற்று
பிள்ளைகளுக்கு சிறந்த முறையில் கல்வியை வழங்குகின்றனர். உங்கள் இலக்கை நோக்கி சரியான பாதையில் செல்கின்றீர்கள்.
இதன் காரணமாக தமிழ் சமூகத்தை எனக்கு மிகவும் பிடிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். |