பொதுத் தேர்தலைத் தடுக்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கை - லால்காந்த குற்றச்சாட்டு
பொதுத் தேர்தலைத் தடுப்பதற்கு அரசாங்கம் திட்டம்
பொதுத் தேர்தலைத் தடுப்பதற்கு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் சபை உறுப்பினர் கே.டி.லால்காந்த குற்றம்சாட்டியுள்ளார்.
தலத்துஓயாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியிருந்தார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“நாட்டில் ஸ்திரத்தன்மையை உருவாக்குவதற்கும் பொருளாதாரப் பிரச்சினைகளை சரிசெய்வதற்கும், தற்போதைய சமூக மற்றும் அரசியல் நெருக்கடியை தேர்தலின் மூலம் தீர்க்க வேண்டும்.
நாடாளுமன்றத் கலைப்பு
நாடாளுமன்றத்தைக் கலைத்து புதிய அரசாங்கத்தை உருவாக்குமாறு அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தற்போது, தேர்தலை நடத்த முடியாது என்ற தேர்தல் ஆணையாளரின் கருத்துகளை நிராகரிக்கிறேன். தனது தனிப்பட்ட விருப்பம் இருந்த போதிலும் பொதுத் தேர்தலை ஏற்பாடு செய்யுமாறு கேட்டால் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என அவர் கூறுகிறார்.
ஆணையாளரின் கருத்துகள் தேர்தலை நடத்துவதை நிறுத்துவதற்கான அரசாங்கத்தின் தந்திரோபாயங்களுக்கு ஆதரவளிப்பதில் அவரது பக்கச்சார்பான தன்மையைக் காட்டுகின்றன” என்றார்.


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 12 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்