விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்படவுள்ள பணம்
உர மானிய பணத்தை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைப்பதற்கு தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விடயத்தினை விவசாய அமைச்சு (Ministry of Agriculture) தெரிவித்துள்ளது.
கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக உர மானியப் பணம் வங்கிக் கணக்கில் வரவு வைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
வங்கி கணக்கில் வைப்பிலிடல்
இதன்படி, இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்கு நேற்று (18)அதிகாரிகள் குழுவொன்று அனுப்பி வைக்கப்பட்டதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் குறித்த பணத்தை வங்கி கணக்கில் வைப்பிலிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான அறிக்கையை இன்று (19) விவசாய அமைச்சின் செயலாளரிடம் கையளிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், குறித்த பணம் இதுவரை கிடைக்கவில்லை என விவசாயிகள் நேற்று (19) ஊடங்களுக்கு தெரிவித்திருந்தனர்.
இதேவேளை விவசாயிகளுக்கு பெரும் போகத்திற்கான உர மானியங்களை வழங்குவதற்கான முதலாம் கட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன கமநல சேவைகள் ஆணையாளர் நாயகம் ரோஹன ராஜபக்ச (Rohana Rajapaksa) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |