உள்ளூராட்சி சபைகளுக்கு பில்லியன் கணக்கான நிதி ஒதுக்கீடு
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளின் படி, 339 உள்ளூராட்சி அமைப்புகளில் 336 இல் நிர்வாக அதிகாரம் நிறுவப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு (The Ministry of Provincial Councils and Local Government) உறுதிப்படுத்தியுள்ளது.
சீதாவக்க மற்றும் ஆனமடுவவில் உள்ள சபைகளை அமைப்பது கோரம் இல்லாததால் தாமதமாகியுள்ளது என்றும், வனத்தவில்லு பிரதேச சபை நடந்து வரும் சட்ட நடவடிக்கைகள் காரணமாக நிலுவையில் உள்ளது என்று பிரதி அமைச்சர் ருவான் செனரத் (Ruwan Senarath) தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றங்களில் வளர்ச்சி நடவடிக்கைகளை விரைவுபடுத்த 23 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு அறிவித்துள்ளது.
ஆதிக்கம் செலுத்தும் அரசியல் சக்தி
தேசிய மக்கள் சக்தி (NPP) ஆதிக்கம் செலுத்தும் அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ள நிலையில் 224 உள்ளூராட்சி அமைப்புகளின் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
ஐக்கிய மக்கள் (SJB) 36 சபைகளில் ஆட்சியமைத்து அடுத்தபடியாகவும், இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) 33 சபைகளின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியுள்ளது எனவும் பிரதி அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) 7 சபைகளிலும், சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 6 சபைகளிலும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (LLC) 3 சபைகளிலும், பொதுஜன ஐக்கிய பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி (UNP) தலா 2 சபைகளிலும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
சமீபத்திய உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில், 339 உள்ளூராட்சி மன்றங்களுக்கு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
