குறி வைக்கப்பட்ட சலே..! ராஜபக்சக்களை பழி வாங்க திட்டம் - கதறும் சாகர
அநுர அரசாங்கம் ராஜபக்ச குடும்பத்தினரைப் பழிவாங்கத் திட்டமிட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் குற்றம் சாட்டியுள்ளார்.
2019 ஆம் ஆண்டில் கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்குக் கொண்டுவரும் நோக்கிலேயே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் திட்டமிடப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை சாகர காரியவசம் முற்றாக மறுத்துள்ளார்.
ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
உண்மையான சாட்சியங்கள்
அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய அநுர அரசு ராஜபக்சக்கள் மீதான அச்சத்தின் காரணமாகவே சுரேஷ் சலேக்கு ஏன் இந்தளவுக்குச் சித்திரவதைகளை செய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திடம் ஏதேனும் உண்மையான சாட்சியங்கள் இருந்தால் அவற்றை அநாகரீகமான முறையில் மறைக்காமல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று சவால் விடுத்துள்ளார்.
முறையான சாட்சியங்களின் அடிப்படையில் விசாரணை நடத்துவதற்குப் பதிலாக, தற்போது ஒருவரைக் கைது செய்து, அடித்து, அநாகரீகமான முறையில் சித்திரவதை செய்து செயற்கையாகச் சாட்சியங்களை உருவாக்க அரசாங்கம் முயற்சிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |