அரச ஊழியர்களின் சம்பள விவகாரத்தில் பொய்யுரைக்கும் ஹரிணி: குற்றஞ்சாட்டும் சாகல ரத்நாயக்க

Government Employee Sagala Ratnayaka Money Harini Amarasuriya
By Shadhu Shanker Nov 01, 2024 12:25 AM GMT
Report

அரச ஊழியர்களின் சம்பள விவகாரத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya ) தொடர்ந்தும் பொய்களையே கூறிக் கொண்டிருக்கின்றார் என முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க (Sagala Ratnayaka)  தெரிவித்துள்ளார்.

பிரதமராக பொறுப்பான பதவியிலிருந்து கொண்டு பொய் கூறிக் கொண்டிருப்பவரை நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்ய வேண்டுமா என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் நேற்றைய தினம் 31, இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அரசாங்க ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு : ரணில்,அநுரவிற்கு நாமல் சாட்டையடி

அரசாங்க ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு : ரணில்,அநுரவிற்கு நாமல் சாட்டையடி

சம்பள விவகாரம்

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ''தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாடு தொடர்பில் பின்பற்றும் கொள்கை என்ன என்பது தொடர்பில் தெளிவற்ற நிலைமையே காணப்படுகிறது.

அரச ஊழியர்களின் சம்பள விவகாரத்தில் பொய்யுரைக்கும் ஹரிணி: குற்றஞ்சாட்டும் சாகல ரத்நாயக்க | Govt Salary Issue Increase Pm False Claims Exposed

ஒரு சந்தர்ப்பத்தில் அரசாங்கம் சர்வதேசத்துக்கு உரையாற்றிய போது அந்த ஒப்பந்தத்தை அவ்வாறே நடைமுறைப்படுத்துவதாகக் கூறியது. நாணய நிதியக் குழு நாட்டுக்கு வருகை தந்த போதும், அமெரிக்காவில் இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான வழக்கொன்றின் போதும் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

ஆனால் தெளிவாக இதுதான் எம்முடைய கொள்கை என்று அரசாங்கம் குறிப்பிடவில்லை. மறுபுறம் அரச உத்தியோகத்தர்களின் சம்பள விவகாரத்திலும் அரசாங்கம் இவ்வாறான குழப்பத்திலேயே பயணித்துக் கொண்டிருக்கிறது.

திருடர்களை பிடிக்க ஆர்வம் காட்டாத அநுர அரசு: காரணத்தை வெளியிட்ட பிரதமர் ஹரிணி

திருடர்களை பிடிக்க ஆர்வம் காட்டாத அநுர அரசு: காரணத்தை வெளியிட்ட பிரதமர் ஹரிணி

 பொருளாதார வளர்ச்சி வேகம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கேள்விகளுக்கு பதிலளிக்காத ஜனாதிபதி, தற்போது பிரதமரை அதற்காக முன்னிலைப்படுத்தியுள்ளார். 2024 இல் நாம் எதிர்பார்த்ததை விட பொருளாதார வளர்ச்சி வேகம் அதிகமாகவே காணப்பட்டது.

அரச ஊழியர்களின் சம்பள விவகாரத்தில் பொய்யுரைக்கும் ஹரிணி: குற்றஞ்சாட்டும் சாகல ரத்நாயக்க | Govt Salary Issue Increase Pm False Claims Exposed

அதற்கமைய அரச உத்தியோகத்தர்களுக்கு வாழ்க்கை செலவு கொடுப்பனவாக 10 000 ரூபா வழங்கப்பட்டது. எனினும் அந்த கொடுப்பனவு வழங்கப்பட்ட பின்னரும் ஆசிரியர் உள்ளிட்ட தொழிற்சங்கங்களால் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

அந்த ஆர்ப்பாட்டங்களின் பின்னணியில் யார் இருந்தனர் என்பதையும் நாம் அறிவோம். எவ்வாறிருப்பினும் இதற்காக நியமிக்கப்பட்ட உதய ஆர் செனவிரத்ன குழுவின் அறிக்கைக்கமைய அடுத்த வருடம் முதல் அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தை 24 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

2025 மற்றும் 2026 ஆகிய இரு வருடங்களில் இந்த அதிகரிப்பை வழங்குவதற்கு அந்த குழுவால் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. வரவு - செலவு திட்டத்தின் ஊடான இதனை நடைமுறைப்படுத்துவதற்கும் எமது அரசாங்கம் திட்டமிட்டிருந்தது.

யாரை நம்புவது என்ற கையறுநிலையில் ஈழத்தமிழர்களின் அரசியல் பரப்பு!

யாரை நம்புவது என்ற கையறுநிலையில் ஈழத்தமிழர்களின் அரசியல் பரப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் 

ஆனால் பிரதமர் ஹரிணி அமரசூரிய, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொய் கூறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர்களின் சம்பள விவகாரத்தில் பொய்யுரைக்கும் ஹரிணி: குற்றஞ்சாட்டும் சாகல ரத்நாயக்க | Govt Salary Issue Increase Pm False Claims Exposed

உண்மையில் தேசிய மக்கள் சக்தி பொய் கூறியுள்ளது. தேர்தலுக்கு முன்னர் 6 மாதங்களுக்கொருமுறை சம்பள அதிகரிப்பை வழங்குவதாகக் கூறிய ஜே.வி.பி. தற்போது அதனை முற்றாக மறுக்கிறது. அவ்வாறெனில் யார் தற்போது பொய்யுரைத்துள்ளது?

அரசியலில் எந்தளவு நெருக்கடிகளை எதிர்கொண்டாலும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஒருபோதும் பொய் கூறி மக்களை ஏமாற்ற மாட்டார்." என்றார்.

எனினும் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக 17 தடவைகள் மக்களால் நிராகரிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) போன்ற ஒருவரின் ஆலோசனையை நான் ஒருபோதும் பெறமாட்டேன் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
மரண அறிவித்தல்

நுணாவில், சாம்பல்தீவு

25 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, நெதர்லாந்து, Netherlands

26 Apr, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, Toronto, Canada

27 Mar, 2026
மரண அறிவித்தல்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024