மூக்குடைக்கப்படும் சஜித்! மனநிலையை சோதிக்க தயாரான அரசாங்கம்
புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் கோரிக்கைகளுக்கு பதிலளிப்பதற்கு முன்பு, அரசாங்கம் முதலில் அவரது மனநிலையை ஆராய வேண்டும் என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
களுத்துறையில் ஊடகங்களுக்கு உரையாற்றிய அமைச்சர், சஜித் முன்னதாக கல்வி சீர்திருத்தங்களுக்கு எதிராக மதுகமவில் உள்ள சி.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கர சிலைக்கு முன்னால் ஒரு போராட்டத்தை நடத்தியதை நினைவு கூர்ந்தார்.
சஜித் போன்றோர் உருவாகும் வாய்ப்பு
எனினும், தற்போது அவர் அதே சீர்திருத்தங்களை உடனடியாக செயல்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து பதில் அளித்த அமைச்சர் நளிந்த, "இந்த கல்வி சீர்திருத்தங்கள் தாமதமின்றி செயல்படுத்தப்படாவிட்டால், எதிர்காலத்தில் சஜித் பிரேமதாச போன்ற அதிகமான நபர்களை உருவாகும் வாய்ப்பு உள்ளது.
இந்த சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்பட வேண்டியதற்கு இதுவே மற்றொரு காரணம்" என்றார்.
மேலும், புதிய தொகுதிகளில் சுமார் 147 பிரச்சினைகள் இருப்பதாக சஜித் கூறியதாக தெரிவித்த அமைச்சர், சஜித் பிரேமதாசவின் தாளத்திற்கு ஏற்ப நாங்கள் செயல்பட முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |