தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் மாற்றம்! வெளியான தகவல்
Grade 05 Scholarship examination
By pavan
இந்த ஆண்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் புதிய நடைமுறையொன்று செயற்படுத்தப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சைக்கான சகல நடவடிக்கைகளும் தற்போது தயார்ப்படுத்தப்பட்டுள்ளன.
எனினும் இம்முறை பகுதி இரண்டின் வினாப்பத்திரமே முதலில் வழங்கப்படும். கடந்த காலங்களில் பகுதி ஒன்று வினாப்பத்திரமே முதலில் வழங்கப்பட்டது.
பெற்றோர்களால் கோரிக்கை
பகுதி ஒன்று வினாப்பத்திரம் என்பது நுண்ணறிவு வினாக்களை கொண்டதாகும்.
பகுதி ஒன்று வினாப்பத்திரம் கடினமானது என்பதால் பாட விடயதானங்கள் அடங்கிய பகுதி இரண்டின் வினாப்பத்திரத்தை முதலில் வழங்குமாறு பெற்றோர்களால் கோரப்பட்டிருந்தது என சுட்டிக்காட்டியுள்ளார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கைலாச வாகனம்


திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..! 2 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்