பட்டதாரிகளின் நியமனங்களில் அநீதி!
Parliament of Sri Lanka
Sajith Premadasa
By Mohankumar
60,000 பட்டதாரிகளுக்கான நியமனங்கள் வழங்கும் வேலைத்திட்டத்தில் 465 பட்டதாரிகளுக்கான நியமனங்கள் இடைநிறுத்தப்பட்டிருந்தது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் தாம் முன்வைத்த கோரிக்கைகளை கருத்திற்கொண்டு அநீதி இழைக்கப்பட்ட பலருக்கு நீதி கிடைத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
இன்றைய தினம் (09) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்விலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
விரைவில் நியமனம்
இது குறித்து மேலும் அவர் குறிப்பிடுகையில்,
“465 பட்டதாரிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இதன் எண்ணிக்கை 443 ஆக குறைந்துள்ளது.
அவர்களுக்கான நியமனங்களை மிக விரைவாக மேற்கொள்ள வேண்டும்.
இது தொடர்பில் கவனம் செலுத்திய பிரதமருக்கு நன்றி.” என்றார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்