பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுடன் 100 ஆவது பிறந்தநாளை கொண்டாடிய பாட்டி

Sri Lanka Birthday
By Jaso Oct 30, 2024 06:21 PM GMT
Report

கொட்டுக்கச்சியவைச் சேர்ந்த மெணிக்ஹாமி என்பவர், தனது பிள்ளைகள், பேரக்குழந்தைகளுடன் இணைந்து, தனது நூறாவது பிறந்தநாளை மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளார்.

1924ஆம் ஆண்டு பிறந்த மெணிக்ஹாமியின் சொந்த ஊர் மஹகும்புக்கடவல, சொஹொன்கல்ம்ப எனும் கிராமம்.அவர் கொட்டுக்கச்சியை சேர்ந்த ஏ.எம். பண்டாப்பு என்பவரை திருமணம் செய்து நூறு ஆண்டுகள் வாழ்ந்த பெருமையைப் பெற்றுள்ளார்.அவரது அன்புக் கணவன், ஒரு சில வருடங்களுக்கு முன் மரணமடைந்துள்ளார்.

11 பிள்ளைகள்,24 பேரக்குழந்தைகள் 

பதினொரு பிள்ளைகளைப் பெற்றெடுத்த அவர், அந்த பதினொரு குழந்தைகளையும் கஷ்டங்களுக்கு மத்தியில் வளர்த்துள்ளார். பதினொரு குழந்தைகளின் தாயான மெணிக்ஹாமிக்கு 24 பேரக்குழந்தைகள் உள்ளனர். பதினொரு பிள்ளைகளுக்கு அன்பைக் கொடுத்த இந்தத் தாய்க்கு அவருடைய பிள்ளைகள் வைத்திருக்கும் அன்பு வியக்கத்தக்கது.

பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுடன் 100 ஆவது பிறந்தநாளை கொண்டாடிய பாட்டி | Grandmother Celebrates Her 100Th Birthday

வயதான பெற்றோரை வீதியோரத்தில் விட்டுச் செல்லும் குழந்தைகள் இருக்கும் நாட்டில், தாய் மெனிக்ஹாமியின் பிள்ளைகள் தங்கள் தாயை மிகவும் அன்புடன் கவனித்து உண்மையான குழந்தைகளாக தங்கள் கடமையை நிறைவேற்றுகிறார்கள்.

மிருகங்களை போல் மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேல்: கண்ணீரில் மிதக்கும் காசா

மிருகங்களை போல் மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேல்: கண்ணீரில் மிதக்கும் காசா

 உறவுகள் வாழ்த்தியதால் மகிழ்ச்சி

நூறு வயது பிறந்தநாளைக் கொண்டாடியபோது, ​​அக்கம்பக்கத்தினர், உறவினர்கள், நண்பர்கள் வந்து வாழ்த்தியமை தொடர்பில் மேலும் மகிழ்ச்சியடைவதாக அவர் தெரிவிக்கின்றார்.

பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுடன் 100 ஆவது பிறந்தநாளை கொண்டாடிய பாட்டி | Grandmother Celebrates Her 100Th Birthday

கொட்டுகச்சிய கிராமத்தில் நூறு வயதைக் கொண்டாடிய ஒரேயொருவர் இவர் என தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது வருகை தந்திருந்தவர்கள், அவர் இன்னும் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்தினர்.

இலங்கைக்கு அமெரிக்கா அளித்த நன்கொடை

இலங்கைக்கு அமெரிக்கா அளித்த நன்கொடை


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


Gallery
ReeCha
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026