கிளிநொச்சி யுனைட்டட் அணி அபார வெற்றி..!
இலங்கை துடுப்பாட்ட சபையினூடாக கிளி மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தினால் இன்று நடைபெற்ற பிரிவு III இற்கான முதலாவது போட்டி கிளி மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது.
குறித்த போட்டியில் நியூ ஸ்டார் மற்றும் யுனைட்டட் விளையாட்டுக்கழகம் மோதி கொண்டது.
நாணய சுழற்றியில் வெற்றிபெற நியூ ஸ்டார் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது அதன்படி 41.2 ஓவர்களில் 155 ஓட்டங்களுக்கு அனைத்து இலக்குகளையும் இழந்தது.

இதன் போது, பந்து வீச்சில் தானுஐன் 6.2 ஓவர்கள் பந்து வீசி 17 ஓட்டங்களை கொடுத்து 4 இலக்குகளையும் , பிரதீபன் 9 ஓவர்கள் பந்து வீசி 35 ஓட்டங்களை கொடுத்து 3 இலக்குகளையும் கைபற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய யுனைட்டட் விளையாட்டுக்கழகம் 23.1 ஓவர்களில் ஜெனுசனின் அதிரடியான சதத்துடன் (67 பந்துகளில் 12 நான்கு ஓட்டங்கள் மற்றும் 5 ஆறு ஓட்டங்கள் உள்ளடங்களாக ) ஆட்டமிழக்காமல் பெற்ற 106 ஓட்ட உதவியுடன் இலகு வெற்றியை பதிவு செய்தது.
இப்போட்டி தொடரில் களமிறங்கியிருக்கும் யுனைட்டட் அணிக்கு றீச்ஷா அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 17 மணி நேரம் முன்