நேட்டோவை மூழ்கடிக்க போகும் கிரீன்லாந்து பனிப்பாறை!
அட்லாண்டிக் கடல்கடந்த உறவு முறிந்து, கிரீன்லாந்தை கையகப்படுத்துவதற்கு அமெரிக்கா ஜனாதிபதி முன்னுரிமை அளித்து வருவதால், "வெற்றியாளர்கள்" சீனாவும் ரஷ்யாவும் மட்டுமே என்று நேட்டோ பொதுச் செயலாளர் ஆண்டர்ஸ் ஃபோ ராஸ்முசென் தெரிவித்துள்ளார்.
ட்ரம்பின் தேர்வு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு பயனளிக்கிறது என்று அவர் தெரிவித்தார். அதன்படி கிரீன்லாந்து நேட்டோவை மூழ்கடிக்கும் பனிப்பாறையாக இருக்க முடியும் என்று புடின் நம்புகிறார் என்று நான் நினைக்கிறேன் எனவும் அவர் விளக்கியுள்ளார்.
2001 மற்றும் 2009 க்கு இடையில் டென்மார்க்கின் பிரதமராகவும் பணியாற்றிய ஆண்டர்ஸ் ஃபோக் ராஸ்முசென், அமெரிக்காவுடனான அதன் கூட்டாண்மையிலிருந்து சுதந்திரம் பெற ஐரோப்பிய தரப்புகள் ஒன்றுபட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
வெளிப்படையான முடிவு
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“நான் எப்போதும் அமெரிக்காவை சுதந்திர உலகின் இயற்கையான தலைவராகக் கருதுகிறேன். எனவே, எனக்கு, இது மிகவும் வேதனையான செயல்முறையாகும்.

அமெரிக்காவை நம்பியிருப்பதில் இருந்து விலகிச் செல்ல ஐரோப்பாவின் வெளிப்படையான முடிவைப் பற்றி கருத்துக்கள் வெளிவருகிறது.
மேலும் அவரது ஐரோப்பிய நட்பு நாடுகளில் பலர் இந்த உணர்வைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.
அமெரிக்கா கிரீன்லாந்திற்கு எதிராக இராணுவ நடவடிக்கையைத் தொடங்கினால், அது நேட்டோவின் முடிவாக இருக்கும்.
ஐரோப்பாவைப் பாதுகாக்க நாம் நமது சொந்த ஐரோப்பிய நேட்டோவை உருவாக்க வேண்டும்” என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |