கிரீன்லாந்தில் ட்ரம்ப்பின் ஆக்கிரமிப்பு முடிவுக்கு எதிராக திரண்ட மக்கள்!
கிரீன்லாந்தை கைப்பற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டில் ஆயிரக்கணக்கானோர் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.
கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல என்ற வாசகத்துடன் பதாகைகளையும் மற்றும் தேசியக் கொடியையும் ஏந்தியவாறு மக்கள் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.
கிரீன்லாந்தின் தலைநகர் நூக் நகரில் இருந்து அமெரிக்க துணை தூதரகம் வரையில் பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்காக கோல்டன் டோம் பாதுகாப்பு அமைப்பை நிறுவ ட்ரம்ப் தீவிரம் காட்டி வருகின்றார்.
இதற்கு கிரீன்லாந்து முக்கியமானது என்பதால் ட்ரம்ப் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றார்.

இந்தநிலையில், கிரீன்லாந்தை கைப்பற்றும் அமெரிக்காவின் முடிவுக்கு ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இவ்வாறு எதிர்ப்பு தெரிவிக்கும் நாடுகளுக்கு கூடுதலாக பத்து வீதம் வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |