ஐரோப்பிய ஒன்றியம் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை நிறுத்தினால்... இலங்கை அரசுக்கு கடுமையான எச்சரிக்கை
ஐரோப்பிய ஒன்றையத்தின், ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை இலங்கை இழக்க நேரிடும் அபாயத்தை எதிர்கொண்டால், அதிக வரியை செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். இது சர்வதேச சந்தையில் இலங்கையை குறைந்த போட்டி கொண்ட நாடாக மாற்றி விடும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
இலங்கை ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையை இழக்க நேரிடும் சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயும் வகையில் ஐரோப்பிய நாடாளுமன்றம் கடந்த வாரம் ஒரு முன்மொழிவை செய்திருக்கிறது.
இந்தநிலையிலேயே பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கையை விடுத்துள்ளனர். 2021, ஜூன் 10 அன்று, ஐரோப்பிய நாடாளுமன்றம் இலங்கையின் ஜி.எஸ்.பி பிளஸ் நிலையை தற்காலிகமாக திரும்பப் பெறுமாறு ஐரோப்பிய ஆணையத்தை வலியுறுத்தி ஒரு தீர்மானம் நிறைவேற்றியது.
தொற்றுநோயின் மூன்றாவது அலைகளைத் தொடர்ந்து இலங்கை மூன்று வார முடக்கலுக்கு உட்பட்டுள்ளது. இந்தநிலையில் செயல்பட அனுமதிக்கப்பட்ட சில அத்தியாவசிய சேவைகளில் ஆடைத் தொழில் ஒன்றாக அமைந்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்துடனான அதிக வர்த்தகம் மூலம் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதும், ஏற்றுமதியைப் பன்முகப்படுத்துவதற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்கும் ஜி.எஸ்.பி பிளஸின் நோக்கமாகும். இந்த நன்மை மூலம் இலங்கையின் ஏறுமதிகளில் 66% கட்டண வரி விலக்கு கிடைக்கிறது.
இது ஆடை மற்றும் மீன்வளம் உள்ளிட்ட பல்வேறு வகையான தயாரிப்புகளை உள்ளடக்கும். இந்த திட்டம் இலங்கைக்குள் புதிய தொழில்களுக்கு வழியை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை ஜிஎஸ்பி பிளஸ் திரும்பப் பெறுவது என்பது, இலங்கையின் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஏற்றுமதியை பாதிக்கும் மற்றும் சர்வதேச சந்தையில் மற்ற நாடுகளுடன் போட்டியிட முடியாத நாடாக இலங்கையை மாற்றிவிடும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத்துறை பேராசிரியர் சிரிமல் அபேரத்னே தெரிவித்துள்ளார்.
வறுமையான நாடுகள் என்ற வகையில், ஜிஎஸ்பி பிளஸ் எட்டு நாடுகளுக்கு வழங்கப்படுகிறது, தற்போது, ஜி.எஸ்.பி பிளஸ், ஐரோப்பிய ஒன்றியத்தால் ஆர்மீனியா, பொலிவியா, கிர்கிஸ்தான், மங்கோலியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் மற்றும் இலங்கைக்கு வழங்கப்படுகிறது.
இந்தநிலையில் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை பெற இலங்கை சில சர்வதேச விதிகளை அங்கீகரிக்க வேண்டும். ஆனால் இதில் சில விதிகளை இலங்கையால் செயல்படுத்த முடியவில்லை என்று பேராசிரியர் அபேரத்னே மேலும் கூறியுள்ளார்.
டாப்ஸ், மளிகை, பிறந்தநாள் கேக்குகள், பழங்கள், சாக்லேட்டுகள், ஆடை மற்றும் மின்னணுவியல் போன்ற ஆன்லைன் ஷாப்பிங் வகைகளை கப்ருகாவின் அதிக விற்பனையாகும்.
கப்ருகாவின் தனித்துவமான ஆன்லைன் சேவைகளான பணம் அனுப்புதல், செய்தி, கூரியர் / டெலிவரி, உணவு விநியோகம் மற்றும் 700 க்கும் மேற்பட்ட சிறந்த பிராண்டுகளையும்
காண்க. அமேசான் & ஈபே நிறுவனங்களிலிருந்து கப்ருகா குளோபல் கடை வழியாக இலங்கைக்கு தயாரிப்புகளையும் பெறுங்கள்.