வெலிக்கடைக்கு போதைப்பொருள் கடத்த முயன்ற சிறைக் காவலர் கைது
வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருட்களை கொண்டு செல்ல முயன்ற சிறைச்சாலை காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை இன்று (14.09.2026) இடம்பெற்றுள்ளது.
சிறைச்சாலை ஆணையாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் எஸ்.கே. பள்ளேதென்ன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மேலதிக சட்ட நடவடிக்கை
குறித்த சிறைச்சாலை காவலர் தனது காலணிக்குள் மறைத்து வைத்து 98 கிராம் ஐஸ் போதைப்பொருளையும், 16 கிராம் ஹெரோயினையும் சிறைச்சாலைக்குள் கொண்டு செல்ல முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலையின் பிரதான நுழைவாயிலுக்கு உட்புற பகுதியில் சிறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின்போது, அவரது காலணிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சிறைச்சாலை காவலரையும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக காவல்துறையினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |