துப்பாக்கி உரிமம் தொடர்பில் ரணிலின் முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி
துப்பாக்கி கட்டளைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள பாதுகாப்பு அமைச்சராக அதிபர் ரணில் விக்ரமசிங்க (ranil wickramasinghe) முன்வைத்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதனடிப்படையில், துப்பாக்கி கட்டளைச் சட்டத்தின் பிரிவு 24 மற்றும் துணைப்பிரிவு (1) ஆகியவற்றில் திருத்தங்கள் மேற்கெள்ளப்படவுள்ளது.
விவசாய மற்றும் விவசாயம் அல்லாத நடவடிக்கைகளுக்கான உரிமங்களில் பாதுகாப்பு அமைச்சகம் (ministry of defense) துப்பாக்கிகளை வழங்குகிறது.
திறைசேரி வருமானம்
தற்போது பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட துப்பாக்கிகளின் எண்ணிக்கை 34, 318 மற்றும் உரிமக் கட்டணமாக வருடாந்தம் 45 மில்லியன் ரூபா திறைசேரிக்கு வருமானம் வருகிறது.
1969 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க துப்பாக்கிகள் கட்டளைச் சட்டம் மற்றும் 1996 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க துப்பாக்கிகள் திருத்தச் சட்டம் ஆகியவற்றால் பரிந்துரைக்கப்பட்ட உரிமக் கட்டணங்களை புதுப்பிக்கவும் திருத்தவும் அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
1816 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க துப்பாக்கி கட்டளைச் சட்டம் மற்றும் 1996 ஆம் ஆண்டு இலக்கம் 22 ஆம் இலக்க துப்பாக்கிச் சட்டத்தை காலத்தின் தேவைக்கேற்ப முற்றாகத் திருத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை பாதுகாப்பு அமைச்சு எடுத்துள்ளது, ஆனால் அத்தகைய திருத்தங்கள் செய்யப்படும் என அரசாங்கம் கூறுகிறது.
துப்பாக்கி கட்டளைச் சட்டத்தின் பிரிவு 24 மற்றும் துணைப்பிரிவு (1) இன் பிரிவு 24 மற்றும் துணைப்பிரிவு (1) ஆகியவற்றை உடனடியாகத் திருத்த பாதுகாப்பு அமைச்சராக முன்வைத்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |