சாரதி இருக்கையில் மீட்கப்பட்ட சடலம் - வெள்ளை வானை சுற்றிவளைத்த காவல்துறை(காணொளி)
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள மான்டேரி பூங்காவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 10 பேர் வரை கொல்லப்பட்டனர்
இந்நிலையில் கொலையாளியோடு சம்பந்தப்பட்ட வெள்ளை வான் SWAT காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மான்டேரி பூங்காவில் திடீரென நுழைந்த மர்ம நபர், துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை சரமாரியாக சுடத் தொடங்கினார்.
வெகுஜன துப்பாக்கிச் சூடு
இந்த துப்பாக்கி சூட்டில் 10 பேர் வரை உயிரிழந்த நிலையில் மேலும் பத்து பேர் காயமடைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை இந்த ஆண்டின் 33 வது வெகுஜன துப்பாக்கிச் சூடு என்று அமெரிக்காவின் துப்பாக்கி வன்முறை காப்பகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் லாஸ் ஏஞ்சல்ஸ் கன்ட்ரி ஷெரீப் அலுவலகம் துப்பாக்கி சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரின் அடையாளத்தை வெளியிட்டுள்ளது.
சாரதி இருக்கையில் சடலம்
⚠️ UPDATE: Suspect in Monterey Park, California mass shooting identified as 72 years old Huu Can Tran.
— Mariana (@lonestarherd) January 23, 2023
Story will dissipate in 24 hrs pic.twitter.com/fCX8eZ0scV
இந்நிலையில் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபருடன் தொடர்புடையதாக கருதப்படும் வெள்ளை வானை SWAT காவல்துறையினர் குழு முற்றுகையிட்டுள்ளது.
குறித்த சுற்றிவளைப்பில் Torrance இல் SWAT காவல்துறையினரால் பரிசோதிக்கப்பட்ட போது வானின் சாரதி இருக்கையில் ஒரு சடலம் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
?#BREAKING: SWAT has surrounded a white van that may have shooter inside
— R A W S A L E R T S (@rawsalerts) January 22, 2023
?#Torrance | #California
Currently SWAT and other units have surrounded a white van matching the suspect description of the man who killed 10 injured 10 in a mass shooting last night in Monterey Park pic.twitter.com/GlGMxmfVe9

