முடி உதிர்வு பொடுகு தொல்லையால் சிரமப்படுகிறீர்களா - இதோ உங்களுக்கான தீர்வு
ஆனைக்கொய்யா பழம் பொதுவாக வெண்ணெய் பழம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த பழம் சரும பராமரிப்புக்கு மட்டுமல்ல, நம்முடைய கூந்தல் பராமரிப்பிலும் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது.
ஆனைக்கொய்யா விதையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் உங்கள் கூந்தல் வளர்ச்சியில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. ஆனைக்கொய்யா எண்ணெயில் உங்கள் கூந்தலுக்கு தேவையான அனைத்து போஷாக்குகளும் காணப்படுகிறது.
கூந்தல் பிரச்சினை
இந்த எண்ணெயை நீங்கள் வெறுமனே தலைக்கு தேய்த்து வந்தால் போதும் உங்கள் தலைமுடியை வலுப்படுத்த முடியும்.உங்கள் கூந்தல் பிரச்சினைகளை சரி செய்ய முடியும் என்கிறார்கள் நிபுணர்கள்.
இந்த ஆனைக்கொய்யா எண்ணெயில் உள்ள மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் உங்கள் கூந்தலுக்கு ஆழமான போஷாக்கை தருகிறது. இது முடியில் உறிஞ்சப்படும் தண்ணீரை குறைக்கிறது. அதனால் இது வீக்கத்தைக் குறைக்கிறது என்று இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் ட்ரைக்காலஜியின் ஆராய்ச்சி தெரிவிக்கிறது.
எனவே இந்த ஆனைக்கொய்யா எண்ணெயைக் கொண்டு உங்கள் கூந்தலை எப்படி பராமரிக்கலாம் என பார்ப்போம்.
பொடுகு தொல்லை
ஆனைக்கொய்யா எண்ணெயில் தலைமுடிக்கு தேவையான தாதுக்கள், விட்டமின்கள், கொழுப்புகள் போன்றவை உள்ளன. இந்த எண்ணெய் முடிக்கு ஈரப்பதத்தை அளிக்கிறது. பொடுகை குறைக்கிறது. முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. மேலும் முடியை சேதத்தில் இருந்து பாதுகாத்து முடிக்கு பளபளப்பை தருகிறது.
வறண்ட கூந்தல் இருப்பவர்களுக்கு முடி உதிர்வு என்பது அதிகமாக இருக்கும். எனவே அவர்கள் இந்த ஆனைக்கொய்யா எண்ணெயை பயன்படுத்தி வரலாம். இதிலுள்ள கொழுப்பு அமிலங்கள் கூந்தலுக்கு ஈரப்பதத்தை வழங்குகிறது.
இந்த எண்ணெய் உங்கள் மயிர்க்கால்களால் எளிதில் உறிஞ்சப்படும். இந்த எண்ணெயில் மோனோசாச்சுரேட் கொழுப்புகள் மற்றும் ஒலிக் அமிலம் உள்ளது. இந்த எண்ணெய் முடி தண்டுக்குள் எளிதாக ஊடுருவி தலைமுடியின் ஈரப்பதத்திற்கு உதவுகிறது.
இந்த எண்ணெயில் உள்ள விட்டமின் B மற்றும் விட்டமின் E கூந்தலுக்கு நல்ல வலிமையை தருகிறது. இது முடி உடைதலை தடுக்கிறது. கூந்தலில் உள்ள சிக்கலை எளிதாக போக்குகிறது.
சூரிய ஒளியால் ஏற்படும் கூந்தல் பிரச்சினை
வறண்ட மற்றும் மெல்லிய கூந்தல்கள் உங்களுக்கு எளிதாக சிக்கலை உண்டாக்க வாய்ப்பு உள்ளது. இதிலுள்ள விட்டமின் B மற்றும் விட்டமின் E முடியிழைகளை சீரமைத்து கூந்தலை மென்மையாக்குகிறது.
இதன் மூலம் உங்கள் கூந்தலில் உள்ள சிக்கலை எளிதாக எடுத்து விடலாம். நீங்கள் பயன்படுத்தும் கெமிக்கல்கள் நிறைந்த ஷாம்புகள் உங்கள் தலையில் பொடுகுத் தொல்லையை உண்டாக்குகிறது.
இந்த ஆனைக்கொய்யா எண்ணெயை தலையில் ஊற்றி மசாஜ் செய்து வரும் போது பொடுகுத் தொல்லையானது குறைகிறது. இதன் மூலம் உச்சந்தலை ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும்.
இந்த ஆனைக்கொய்யா எண்ணெயை புதினா எண்ணெய் அல்லது ரோஸ்மேரி எண்ணெய் போன்ற அத்தியாவசிய எண்ணெயுடன் சேர்த்து பயன்படுத்தி வந்தால் முடி உதிர்வைக் குறைத்து இயற்கையான முடி வளர்ச்சியை அதிகரிக்க முடியும்.
இந்த எண்ணெயைக் கொண்டு உச்சந்தலையை மசாஜ் செய்வது இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது.
மயிர்க்கால்களை தூண்டி கூந்தல் வளர்ச்சியை பலப்படுத்துகிறது. கூந்தல் சேதமடைவதை தடுக்கிறது அவகேடோ எண்ணெயில் உள்ள கொழுப்பு அமிலங்கள் முடிக்கு ஒரு கவசமாக செயல்படுகிறது.
சூரிய ஒளியால் ஏற்படும் கூந்தல் பிரச்சினைகளில் இருந்து கூந்தலை பாதுகாக்கிறது. இதன் மூலம் உங்கள் சிகை அலங்காரங்களை கூடுதல் அழகாக்கலாம்.
பயன்படுத்தும் முறை
இந்த எண்ணெயை முதலில் 30 விநாடிகள் சூடுபடுத்திக் கொள்ளுங்கள். பிறகு வெதுவெதுப்பான நிலையில் இந்த எண்ணெயை உங்கள் உள்ளங்கைகளில் ஊற்றி தலையில் தேயுங்கள்.
நல்லா மயிர்க்கால்களில் படும் படி தேய்க்க வேண்டும். உங்கள் விரல்களை பயன்படுத்தி வட்ட இயக்கத்தில் லேசாக மசாஜ் செய்யுங்கள்.
15-30 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். பின்னர் சாதாரண நீரில் கூந்தலை அலசிக் கொள்ளுங்கள். வாரந்தோறும் இதைச் செய்து வரும் போது உங்கள் கூந்தல் பளபளப்பாக பட்டு போல் இருப்பதை நீங்கள் காணலாம்.
