பற்றி எரியும் மத்திய கிழக்கு : இஸ்ரேலிய போர் நிறுத்தத்தை நிராகரித்த ஹமாஸ்
காசாவில் (Gaza) உள்ள அனைத்து ஆயுதமேந்திய அமைப்புகளும் இஸ்ரேலிடம் "சரணடைய" வேண்டும் என்ற போர்நிறுத்த திட்டத்தை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
காசாவில் ஆறு வார போர் நிறுத்தத்திற்கான இஸ்ரேலிய முன்மொழிவையும் ஹமாஸ் நிராகரித்துள்ளது.
இந்தத் திட்டம் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கோ அல்லது இஸ்ரேலிய துருப்புக்களை வெளியேற்றுவதற்கோ எந்த உறுதிமொழியையும் அளிக்கவில்லை என ஹமாஸ் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சரணடைய வேண்டும்
காசாவில் இஸ்ரேல் தனது இராணுவத் தாக்குதலைத் தொடர்ந்து வரும் நிலையில் போர்நிறுத்தத்தை முன்மொழிந்துள்ளது.
இஸ்ரேலிய போர்நிறுத்த வரைவு திட்டத்தின்படி, இந்த முயற்சி 45 நாட்கள் அமைதியைக் கோருகிறது, அனைத்து இஸ்ரேலிய பணயக்கைதிகளும் ஒரு கட்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக விடுவிக்கப்படுகிறார்கள்.
போரினால் பாதிக்கப்பட்ட பகுதிக்குள் நுழைய உணவு மற்றும் நிவாரணத்திற்கு ஈடாக இஸ்ரேலிய பணயக்கைதிகளில் பாதி பேர் முதல் வாரத்திற்குள் விடுவிக்கப்பட வேண்டும் என்று 12 அம்ச திட்டம் கூறுகிறது.
உணவு, மருந்து, எரிபொருள் மற்றும் சமையல் எண்ணெய் உள்ளிட்ட முக்கியமான பொருட்களை இஸ்ரேல் ஆறு வாரங்களுக்கும் மேலாக அந்தப் பகுதிக்குள் நுழைவதைத் தடுத்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
