இஸ்ரேலுக்கு அதிர்ச்சி தகவல் :ஹமாஸ் தொடர்பில் அமெரிக்கா வெளியிட்ட அறிவிப்பு
காசாமீது இஸ்ரேல் பாரிய தாக்குதல்களை நடத்தியபோதிலும் ஹமாஸ் அமைப்பு இன்னும் வலுவுடனேயே உள்ளதாக அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன.
அத்துடன் பல மாதங்களுக்கு இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தும் அளவிற்கு ஹமாஸ் வலுவுடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க செய்தி நிறுவனம் வெளியிட்ட அந்த அறிக்கையில்,
சொற்ப போராளிகளையே இழந்த ஹமாஸ்
20 முதல் 30 சதவீத போராளிகளை மட்டுமே ஹமாஸ் அமைப்பு இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'ஹமாஸ் அமைப்பு இன்னும் வலுவுடன் உள்ளது. தனது தந்திரங்களை மாற்றியமைந்து தொடர்ந்து செயல்பட்டு வருவதாக' தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று மாதகால போரில் 16,000 ஹமாஸ் போராளிகளை காயப்படுத்தியதாக இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
காயமடைந்தவர்கள் விரைவில் போருக்கு
ஆனால், அமெரிக்க புலனாய்வு அறிக்கையின்படி, 10,500 முதல் 11,700 பேர் காயமடைந்துள்ளனர்.அதில் பெரும்பாலானோர் விரைவில் போருக்குத் திரும்பலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |