ரணிலிடம் நாட்டை ஒப்படையுங்கள் - பாரிய மாற்றம் உறுதி ; ஐக்கிய தேசிய கட்சி!
"அதிபர் ரணில் விக்ரமசிங்க சிறந்த உலகத் தலைவர்களில் ஒருவர், அவரிடம் தொடர்ச்சியாக நாட்டை ஒப்படைத்தால் இலங்கை பாரிய முன்னேற்றத்தை நோக்கி நகரும்."
இவ்வாறு, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை ஊடகமொன்றின் நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
ரணிலிடம் நாட்டை ஒப்படையுங்கள்
தொடர்ந்து கருத்துரைத்த அவர்,
"ரணில் விக்ரமசிங்க அதிபராக பொறுப்பேற்று குறுகிய காலத்தில் நாட்டில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளார்.
மக்களும் அவரை தற்போது புரிந்துகொள்ள ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை, அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து தேசிய இணக்கப்பாட்டுடன் செயல்பட்டால் மாத்திரமே இலங்கையை ஆசியாவில் சிறந்த நாடாக மற்ற முடியும்.
அந்த இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள அனைத்து கட்சிகளும் முன்வர வேண்டும்.
இனி வரும் காலங்களில் இலங்கையில் தனிக்கட்சி ஆட்சி முறை வெற்றியளிக்காது, அரசியல் சுயலாபமின்றி அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட்டால் மாத்திரமே நாட்டை மீட்டெடுக்க முடியும்.
தற்போது நாடு உள்ள சூழ்நிலையில் தேர்தல் தேவையற்ற ஒன்று.
அதிபர் ரணில் விக்ரமசிங்க தற்போது நாட்டிற்கு கிடைத்துள்ள மிகப்பெரிய சொத்து, அவரிடமே தொடர்ச்சியாக நாட்டை ஒப்படைத்தால் இன்னும் 12 ஆண்டுகளில் நாடு பாரிய முன்னேற்றம் காணும்." இவ்வாறு வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
