பிளவுபட்டது சஜித் தரப்பு -ரணில் பக்கம் செல்லும் இருவர் (படம்)
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காண தலையிடும் எந்தவொரு தலைவருக்கும் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கத் தயார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார இருவரும் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அவர்கள் எழுதியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
எனினும், ஏழு நிபந்தனைகளுடன் அரசாங்கத்தை ஆதரிப்பதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
'கோட்டா கோ ஹோம்' போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுங்கள்.
காலி முகத்திடலில் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய அரசியல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவர் முறைமையை ஒழித்தல். மற்றும் 21வது திருத்தத்தை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்துதல் உள்ளிட்ட ஜனநாயக விடயங்களை துரிதப்படுத்துதல்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு காரணமானவர்களைத் தண்டித்து, நீதி வழங்குங்கள்.
நிதி மோசடிகளில் ஈடுபட்ட ராஜபக்ஷ உட்பட சகல நபர்களிடமிருந்தும் பணத்தை மீளப்பெறுதல்.
நாட்டின் அனைத்துத் துறைகளுக்கும் தேசியக் கொள்கையை உருவாக்குதல்.
ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்து அனைத்து வித அநீதிகளுக்கும் ஆளானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.


