ஹரின், மனுஷவை தூக்கி எறியும் சஜித்தரப்பு
SJB
Manusha Nanayakkara
Harin Fernando
By Sumithiran
சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார இருவரையும் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழுவில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்துடன் இணைவதற்கான கட்சியின் கருத்துக்கு எதிராகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அமைச்சு பொறுப்புகள்

குறித்த இருவரும் முன்னர் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து பின்னர் சஜித் பிரேதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி உருவாக பாடுபட்டவர்களாவர்.
எனினும் ரணில் விக்ரமசிங்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து அரசாங்கத்தில் இணைந்து அமைச்சுப்பொறுப்புக்களை வகித்து வருகின்றனர்.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி