அடித்து முன்னேறும் கமலா ஹாரிஸ்: பின்னடைவில் ட்ரம்ப்
அமெரிக்காவின் (US) துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸுக்கும் (Kamala Harris) முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கும் (Donald Trump) இடையிலான முதல் நேரடி தொலைக்காட்சி விவாதத்துக்குப் பின்னரான கருத்துக் கணிப்பில் கமலா ஹாரிஸுக்கு ஆதரவு மேலும் அதிகரித்துள்ளது.
குறித்த விவதாம் நடைபெற்று இரண்டே நாட்களில் ராய்ட்டா்ஸ் மற்றும் இப்ஸாஸ் நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்ட கருத்து கணிப்பில் இது தெரியவந்துள்ளது.
இதன் போது, இந்த புதிய தேர்தல் கருத்து கணிப்பில் கமலா ஹாரிஸுக்கு 47 சதவீதம் போ் ஆதரவு தெரிவித்துள்ளதோடு, ட்ரம்பை 42 சதவீதமானோர் ஆதரித்துள்ளனர்.
ஜனாதிபதி தேர்தல்
இந்த நிலையில், நேரடி விவாதத்துக்குப் பிறகு நடைபெற்ற முதல் கருத்துக் கணிப்பில் கமலா ஹாரிஸ் முன்னிலை வகித்து வருகிறார்.
அமெரிக்காவில் அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 5-ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |