கனேடிய அரசு புகலிடகோரிக்கையாளர்கள் தொடர்பில் எடுக்கவுள்ள முடிவு
புகலிடகோரிக்கையாளர்களை கனடாவின் வெவ்வேறு மாகாணங்களுக்கு அனுப்ப பெடரல் அரசு திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒன்ராறியோ மற்றும் கியூபெக் மாகாணங்களில் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ள பல்லாயிரக்கணக்கான புகலிடக்கோரிக்கையாளர்களை இவ்வாறு வெவ்வேறு மாகணங்களுக்கு அனுப்ப பெடரல் புலம்பெயர்தல் துறை அமைச்சரான மார்க் மில்லர் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
தற்போது கனடாவில் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ளவர்களின் எண்ணிக்கை 235,825 ஆக பதிவாகியுள்ளது.
கோரிக்கை
அதன் போது, ஒன்ராறியோ மற்றும் கியூபெக் மாகாணங்களுக்கே அதிகமானோர் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இந்த நிலையில், குறித்த மாகாணங்களின் முதல்வர்கள் புகலிடக்கோரிக்கையாளர்களை சீரான வகையில், நாடு முழுவதிலுமுள்ள அனைத்து மாகாணங்களுக்கும் பிரித்து அனுப்ப வழிவகை செய்யுமாறு பெடரல் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முதல்வர்கள் எதிர்ப்பு
இதன் படி, பல்லாயிரக்கணக்கான புகலிடக்கோரிக்கையாளர்களை, கனடாவின் வெவ்வேறு மாகாணங்களுக்கு அனுப்ப பெடரல் அரசு திட்டமிட்டுள்ளது.
எனினும், இந்த திட்டத்திற்கு ஏனைய மாகாணங்களின் முதல்வர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |