நாளைய கர்த்தாலுக்கு பூரண ஆதரவை வழங்கும் பிரித்தானிய இந்து கோவில்கள் சங்கம்!
Sri Lankan Tamils
Tamils
England
By pavan
வடக்கு கிழக்கில் நாளை (25) நடைபெறவிருக்கும் கர்த்தாலுக்கு நாங்கள் பூரண ஆதரவை வழங்குவதாக பிரித்தானிய இந்து கோவில்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, நாளை (25) நடைபெறவிருக்கும் கர்த்தாலுக்கு மற்றைய புலம்பெயர் அமைப்புகளும் வேறுபாடு இன்றி பூரண ஆதரவை வழங்குமாறும் குறித்த சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், இந்த கர்த்தாலை முன்னின்று நடாத்தும் கட்சிகள் மற்றும் சங்கங்களுக்கு நட்பையும் ஆதரவையும் வழங்குவதாக பிரித்தானிய இந்து கோவில்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பாகுபாடு இன்றிய கர்த்தால்
அத்துடன், நாட்டில் உள்ள அனைத்து உறவுகளும் எந்த பாகுபாடு இன்றி இவ் கர்த்தாலில் பங்கு கொண்டு அதன் வெற்றியை சிங்கள பௌத்த அரசிற்கு காண்பிக்குமாறும் பிரித்தானிய இந்து கோவில்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.


5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி