இஸ்ரேல் காசா நகரை முற்றிலும் கைப்பற்றிவிட்டதா..! (காணொளி)
காசாவில் 9000 இற்கும் அதிகமான மனித உயிர்கள் பலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்ற சமகாலத்தில் காசா நகரை தனது முழுமையான முற்றுகைக்கு கொண்டுவந்துவிட்டதாக இஸ்ரெலிய படைத்துறை தலைமை அறிவித்துள்ளது.
காசா நகரம் என்பது காசா நிலப்பகுதிக்குள் இருக்கின்ற பிரதானமான ஒரு நகரமாகும்.
காசா நிலப்பரப்பிற்குள் ஐந்து முனைகளால் உள்நுழைந்துள்ள இஸ்ரேலிய படைகள் காசா நிலப்பரப்பில் உள்ள காசா நகரையே தாம் சுற்றி வளைத்துள்ளதாக தெரிவிக்கின்றார்கள்.
அதேவேளை, காசா நகரை கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற இஸ்ரேலிய படைகளுக்கும் ஹமாஸிற்கும் கடுமையான சண்டைகள் பல இடங்களில் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
காசா நிலப்பரப்பிற்குள் முன்னேரிக் கொண்டிருக்கின்ற இஸ்ரேலிய படையினர் மீது நிலக்கீழ் சுரங்கங்கள் வழியாக சென்று தாக்குதல் நடத்துவது போன்று ஹமாஸ் அமைப்பினர் காணொளிகளை வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், இஸ்ரேல் காசா நகரை கைப்பற்றி விட்டதா என்பது தொடர்பாகவும் இஸ்ரேலின் புதிய ஆயுதங்கள் தொடர்பிலும் அறிந்துக் கொள்வதற்கான விரிவான தகவல்களை எடுத்துக் கூறுகிறது இன்றைய நிதர்சனம் நிகழ்ச்சி...