இனி பிரித்தானியாவிற்குள் நுழைய முடியாது: ரிஷி சுனக் பகிரங்கம்
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தோனேஷியா போன்ற நாடுகளில் இருந்து தீவிர இஸ்லாமியவாத கருத்துக்களை கொண்ட வெறுப்பு பரப்புரையாளர்கள் பிரித்தானியாவுக்குள் நுழைவது தடுக்கப்படுமென பிரதமர் ரிஷி சுனக் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
பிரித்தானிய அரசாங்கம் முன்னெடுக்கவிருக்கும் புதிய திட்டத்தின் கீழ் இந்த நடைமுறை சாத்தியப்படுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளதுடன் சமீப ஆண்டுகளாக பிரித்தானியாவில் மத அடிப்படைவாதம் அதிகரித்துள்ளது தொடர்பில் அரசாங்கம் கவலை கொண்டுள்ளதாக கூறப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து வெளிநாட்டவர்களில் மிக ஆபத்தான மத அடிப்படைவாதிகளை அடையாளம் காணும் பொருட்டு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் விசா எச்சரிக்கை பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
மதக் கொள்கைகள்
அவர்கள் இனி பிரித்தானியாவுக்குள் நுழைய முடியாதபடி தடுக்கப்படுவதுடன் நாட்டின் ஜனநாயகம் மற்றும் பல மதக் கொள்கைகள் சில மத அடிப்படைவாதிகளால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாக பிரதமர் ரிஷி சுனக் வெள்ளிக்கிழமை எச்சரிக்கை விடுத்திருந்துள்ளார்.
இந்நிலையிலேயே தற்போது குறிப்பிட்ட மூன்று நாட்டவர்கள் மீது குறிவைக்கப்பட்டுள்ளதுடன் இந்த நாட்டின் விழுமியங்களை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட மக்கள் இந்த நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்கவும் நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என அப்போது அவர் குறிப்பிட்டுள்ளார்.
பேரணிகள்
மேலும், அப்படியான நபர்கள் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துவதாக தெரிய வந்தால் அவர்களை வெளியேற்றும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்படும் என ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
அத்தோடு பலஸ்தீன ஆதரவு பேரணிகளில் மத அடிப்படைவாதிகள் ஊடுருவாமல் இருக்க ஆர்ப்பாட்டக்காரர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |