நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
ஹட்டன் - செனன் தோட்டத்தில் கே.எம். பிரிவில் திங்கட்கிழமை(03) இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 20 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளன.
அதுமட்டுமன்றி குறித்த தீ விபத்து காரணமாக லயன் தொகுதியில் அமைந்திருந்த 20 வீடுகள் சேதமடைந்ததுடன் இந்த வீடுகளில் குடியிருந்த 20 குடும்பங்களை சேர்ந்த 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது, வீட்டின் உடமைகள் அனைத்தும் சேதமடைந்ததுடன், தீயணைப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட பொதுமக்கள் சிலர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் ஹட்டன் நகரசபைக்கு உடனடியாக அறிவிக்கப்பட்டது. ஆனால், சம்பவம் இடம்பெற்று 2 மணித்தியாலங்களின் பின்னரே தீயணைப்புப் பிரிவினர் வருகைத் தந்ததாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
மலையகத் தமிழர்களின் துயரம்
தீயணைப்பு வாகனம் சம்பவ இடத்திற்கு வருகைத் தந்த போது மக்கள் முயற்ச்சியினால், தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
ஆனாலும் இது வரையில் இந்த சம்பவம் தொடர்பில் எந்த ஒரு அதிகாரியும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை ஏன்?
வரலாற்று நினைவகத்தில் மிக ஆழமான நெருக்கடிகளில் ஒன்றாக, எம் நாடு நம் கண் முன்னே சரிந்து விழும் போது, நமது இக்கட்டான நிலையை எந்தக் கோணத்தில் இருந்து நாம் பகுப்பாய்வு செய்ய வேண்டும்?
கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக இலங்கையின் அரசியல் பொருளாதாரம் மலையகத் தமிழர்களின் துன்பங்களிலும் துயரங்களிலும், அவலங்களிலும், போராட்டங்களிலும் நங்கூரமிடப்பட்டுள்ளது.
பிரித்தானிய காலனித்துவத்தின் கீழ், நாட்டின் நவீன பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு மையமாக இருந்தது. இருப்பினும், சமூகத்தில் அவர்களின் நிலைமையையும், வரலாற்றையும் எழுதுவது கூட புறக்கணிக்கப்பட்டது.
மலையகத் தமிழர்களின் பரிதாப நிலை
தோட்டங்களுக்குள் சாத்தியமான வேலை மற்றும் போதுமான வருமானம் கிடைக்காத மலையக இளைஞர்கள், நகர்ப்புறங்களில் குறைந்த ஊதியம் பெறும் முறைசாரா மற்றும் சேவைத் துறைகளில் பணிபுரிகின்றனர்.
வசதி படைத்த வீடுகளில் வீட்டுப் பணியாளர்களாகவும் உணவகங்கள் மற்றும் கடைகளில் பணியாளர்களாகவும் உதவியாளர்களாகவும் பணிபுரிகின்றனர்.
அதேசமயம், தோட்டங்களில் அதிக ஊதியம் மற்றும் சிறந்த சமூக-பொருளாதார நிலைமைகள், குறிப்பாக வீட்டுவசதி மற்றும் பயிர்ச்செய்கைக்கான நிலம் ஆகியவற்றிற்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு தோட்டங்களில் போராட்டங்கள் தொடர்கின்றன. தோட்டங்களின் நீண்டகால எதிர்கால நம்பகத்தன்மை என்பன கேள்விக்குறியாகவே உள்ளன.
பெருந்தோட்டங்களில் மலையகத் தமிழர்களின் பரிதாபகரமான நிலையும், நாட்டின் ஏனைய பகுதிகளில் அவர்கள் மீது ஏவப்பட்டுள்ள சிதறடிக்கப்பட்ட ஒடுக்குமுறையும் முற்றிலும் அவநம்பிக்கையான நிலையை ஏற்படுத்தி உள்ளது எனக் குறிப்பிடலாம்.
மலைநாட்டுத் தமிழர்களின் இக்கட்டான நிலை, இலங்கையின் தற்போதைய நெருக்கடியுடன் நடந்து கொண்டிருக்கும் உழைக்கும் மக்களின் பெரும் துன்பத்தின் மைய அம்சங்களான மிகப்பெரிய ஏற்றத்தாழ்வுகள், அடக்குமுறைச் சுரண்டல் மற்றும் சமூகப் புறக்கணிப்பு ஆகிவை நம்மை எதிர்கொள்கின்றன.
இந்தப் பின்னணியில், நாட்டின் புற எல்லையில் உள்ள பிரச்சனைகள் முறையாகத் தீர்க்கப்படும்போது, என்றெனும் ஒர் நாள் மலையக மண்ணில் உள்ள மக்களின் வாழ்க்கையும் மாறும் என நம்புகிறேன்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Raghav அவரால் எழுதப்பட்டு, 04 March, 2025 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும் 3 மணி நேரம் முன்
