பிரித்தானிய பிரஜைக்கு இலங்கையில் ஏற்பட்ட கதி
Sri Lanka
United Kingdom
Crime
By Sumithiran
பிரித்தானிய பிரஜை ஒருவருக்கு அளுத்கமவில் வீடொன்றை பெற்றுத் தருவதாக கூறி மோசடி செய்த நபர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று (10) கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரித்தானிய பிரஜை செய்த முறைப்பாட்டின் பிரகாரம், அளுத்கம களுவாமோதர பிரதேசத்தில் வசிக்கும் 57 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
வீடு தருவதாக பண மோசடி
இந்த சந்தேக நபர், வீட்டைக் காட்டி, வீட்டைக் கொடுக்காமல் பணத்தைப் பெற்றுக்கொண்டு நிதி மோசடி செய்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்