இருதய நோய் அபாயம் - இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை!
நிலவும் கடுமையான வெப்பம் மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக இலங்கை மக்களுக்கு இருதய நோய்கள் வரக்கூடிய வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனை அரசாங்க ஆயுர்வேத மருத்துவர்கள் சங்கத்தின் செயலாளர் மருத்துவர் சேனக கமகே கூறியுள்ளார்.
இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
எச்சரிக்கை
திறந்த வெளியில் கடமையாற்றும் காவல்துறை உத்தியோகத்தர்கள் போன்றவர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நாட்களில் பல இடங்களில் புத்தாண்டு விளையாட்டு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை திறந்த வெளியில் போட்டிகளை நடத்துவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் இளநீர், தேய்காய் நீர் உள்ளிட்டவற்றை அதிகளவில் பருகுமாறும் கூறப்பட்டுள்ளது.
