வாட்டுகிறது அதி உச்ச வெப்பநிலை -விடுக்கப்பட்ட எச்சரிக்கை
நாட்டில் நிலவும் வெப்பமான வானிலைஅடுத்த சில நாள்களுக்குத் தொடரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ள நிலையில், குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார்கள், முதியவர்கள் மற்றும் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் நீரிழப்பு அபாயத்தில் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நீரிழப்பு அபாயத்தில் உள்ள தரப்பினர் வெயிலில் நடமாடுவதை குறைப்பதுடன், அதிகளவில் நீரை அருந்தி நீரேற்றத்துடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பாடசாலை மாணவர்கள்
பாடசாலை மாணவர்களை வெளிப்புற நடவடிக்கைகளில் இருந்து, குறிப்பாக அத்தியாவசியமற்ற வெளிப்புற செயற்பாடுகளில் இருந்து விலக்கி வைக்குமாறும் வைத்திய நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதேவேளை,அநுராதபுரம், இரத்தினபுரி,வவுனியா போன்ற மாவட்டங்களில் சராசரி வெப்பநிலையை விட அதிக வெப்பம் பதிவாகியுள்ளதாவும் வடக்கு, வடமத்திய,வடமேல், கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை,இரத்தினபுரி மாவட்டங்களிலும் அதிக வெப்பநிலை நிலவும் என்றும் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
போதிய முன்னெச்சரிக்கை
எனவே, பொதுமக்கள்
வெப்பம் தொடர்பான
நோய்களில் இருந்து தங்களை
பாதுகாத்துக்கொள்ள
போதிய முன்னெச்சரிக்கை
நடவடிக்கைகளை
மேற்கொள்ளுமாறு
அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
