பூஸ்ஸ சிறையில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கைப்பேசிகள் மீட்பு!
பூஸ்ஸ உயர் பாதுகாப்புச் சிறையில் நூற்றுக்கும் மேற்பட்ட கைப்பேசிகள் மீட்கப்பட்டுள்ளன.
சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரபல பாதாள உலக குற்றவாளிகளிடமிருந்தே இவ்வாறு கைப்பேசிகள் மீட்கப்பட்டுள்ளன.
இதனடிப்படையில், இந்த ஆண்டில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட கைப்பேசிகள் மீட்கப்பட்டுள்ளதாக சிறப்பு அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
கைப்பேசிகள்
இந்தநிலையில், 2025 டிசம்பர் 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது லொக்கு, பட்டி, மிடிகம ருவான் மற்றும் தெமட்டகொட சமிந்த உள்ளிட்ட கைதிகளின் சிறை அறைகளில் கைப்பேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சில கைப்பேசிகள் நிலத்தடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு, 159 சிம் கார்டுகள், 110 சார்ஜர்கள் மற்றும் இணைய இணைப்பு வழங்கும் ஒரு ரூட்டர் ஆகியனவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதனடிப்படையில், சிறை உள்ளிருந்தே குற்றச் செயல்கள் மேற்கொள்ளப்பட்டதாக விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த சட்டவிரோத பொருட்கள் ஊழல் அதிகாரிகளின் உதவியுடன் சிறைக்குள் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |