பிரித்தானிய விமான நிலைய தீ விபத்தின் பின்னணியில் ரஷ்யா : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
பிரித்தானியாவின் (United Kingdom) ஹீத்ரோ விமான நிலைய (Heathrow Airport) தீ விபத்திற்கு பின்னால் ரஷ்யா (Russia) இருக்கலாம் என நிபுணர்கள் அச்சம் வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹீத்ரோ விமான நிலையத்தை ஸ்தம்பிக்க வைத்த தீ விபத்து, ரஷ்ய நாசவேலைக்கான அனைத்து அறிகுறிகளையும் கொண்டிருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இருப்பினும், தீ விபத்துக்கான காரணம் ஒரு பழைய மற்றும் பழுதடைந்த மின்மாற்றி உடைந்து தீப்பிடித்ததே என ஒருசாரார் தெரிவித்துள்ளனர்.
ரஷ்ய உளவுத்துறை
இந்த தீ விபத்து, ரஷ்ய உளவுத்துறையுடன் தொடர்புடைய தீ விபத்துகள், குண்டுவெடிப்பு சதித்திட்டங்கள் மற்றும் ஐரோப்பா முழுவதும் படுகொலை முயற்சிகளின் ஒரு நடுங்கவைக்கும் வரிசையை பிரதிபலிப்பதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
ஒரு துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து, விமான நிலையத்தை ஸ்தம்பிக்க வைத்ததுடன் அரசு ஆதரவுடன் நடத்தப்பட்ட தாக்குதலாக இருக்கலாம் என்று முன்னாள் இராணுவ அதிகாரிகளும் பாதுகாப்பு நிபுணர்களும் முன்னர் எச்சரித்துள்ளனர்.
இருப்பினும், இதுவரை அப்படியான ஆதாரங்கள் எதுவும் சிக்கவில்லை என்றே தகவல் வெளியாகியுள்ளதுடன் மேலும், பிரித்தானிய மண்ணை விளாடிமிர் புடின் (Vladimir Putin) குறிவைப்பது இது முதல் முறை அல்ல எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
தீவிர விசாரணை
2024 ஆம் ஆண்டு கிழக்கு லண்டனில் (London) உள்ள உக்ரைனுக்குச் (Ukraine) சொந்தமான ஒரு கிடங்கில் இதுபோன்ற ஒரு தீ விபத்து ஏற்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட தீவிர விசாரணையில் ரஷ்யாவின் சார்பாக தீ விபத்தை ஏற்படுத்தியதாக ஒரு பிரித்தானியர் ஒப்புக்கொண்டிருந்தார்.
இந்தநிலையில், ஹீத்ரோ தீ விபத்திற்கும் ரஷ்யா தான் காரணம் என பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) குற்றஞ்சாட்டுவார் என ரஷ்யாவின் முன்னாள் பிரதமர் கொந்தளித்துள்ளார்.
ஏன் இன்னும் அறிக்கை வெளியிடவில்லை ஸ்டார்மர் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார் ஆனால், முன்னாள் இராணுவ தளபதி ஹமிஷ் டி பிரெட்டன் கார்டன் தெரிவிக்கையில், ஹீத்ரோ விவகாரம் ரஷ்ய நாசவேலையின் அனைத்து அடையாளங்களையும் கொண்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
2 வாரங்கள் முன்