யாழில் கனமழை - 32 பேர் பாதிப்பு
இன்று காலை பெய்த மழை காரணமாக, யாழ்ப்பாணத்தில் 7 குடும்பங்களைச் சேர்ந்த 32 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
அந்தவகையில், கரவெட்டி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/351 கிராம சேவகர் பிரிவில், ஒரு குடும்பத்தை சேர்ந்த 5 பேரும், ஜே/363 கிராம சேவகர் பிரிவில், ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரும், ஜே/364 கிராம சேவகர் பிரிவில் 4 குடும்பங்களைச் சேர்ந்த 18 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வளிமண்டலவியல் திணைக்களம்
அத்துடன் பருத்தித்துறை பிரதேசச் செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/393 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இருவரும் பாதிக்கப்பட்டுள்ளதாக, ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் (Department of Meteorology) இன்று (11.8.2025) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல், வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 3 நாட்கள் முன்
