யாழ். மாவட்டம் சீரற்ற காலநிலையால் கடுமையாக பாதிப்பு
யாழ்ப்பாணம் (Jaffna) மாவட்டத்தில் தற்பொழுது தொடர்ச்சியாக ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பணிப்பாளர் டி என் சூரியராஜா ( T.N.Sooriyarajah) தெரிவித்துள்ளார்.
நேற்று முதல் பெய்து வரும் தொடர் மழை காரணமாக தாழ்நிலைப் பிரதேசங்கள் மற்றும் கரையோர பிரதேசங்களை அண்டி வாழும் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீரற்ற காலநிலை
அந்தவகையில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இந்த சீரற்ற காலநிலை காரணமாக, 12 பிரதேச செயலாளர் பிரிவுகளில் பாதிப்பு பதிவாகியுள்ளது.
சாவகச்சேரி, ஊர் காவல்துறை, உடுவில், கோப்பாய் சண்டிலி பாய், யாழ்ப்பாணம், நல்லூர், பருத்தித்துறை, சங்கானை, காரை நகர், நெடுந்தீவு , தெள்ளிப்படை பிரதேச செயலாளர் பிரிவுகளில் இந்த பாதிப்பு உணரப்பட்டுள்ளது.
மேலும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 2040 குடும்பங்களைச் சேர்ந்த 7436 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என டி என் சூரியராஜா தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |