கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் ஆம்பர் எச்சரிக்கை
கடும் மின்னல் தாக்கம் நிலவக்கூடிய வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் ஆம்பர் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
இன்று (19) காலை 11.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை இரவு 11.30 மணி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊவா, கிழக்கு மாகாணங்களிலும் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தினால் 'ஆம்பர்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துக்களைக் குறைத்துக் கொள்ளத் தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது திறந்த வெளிகள், நெல் வயல்கள், தேயிலைத் தோட்டங்கள் அல்லது நீர்நிலைகளில் தங்கியிருப்பதைத் தவிர்க்கவும். மரங்களின் கீழ் தஞ்சம் அடைவதைத் தவிர்த்து, பாதுகாப்பான கட்டிடங்களுக்குள் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |