முள்ளிவாய்க்காலுக்கு படையெடுத்த மக்கள் : பல கிலோமீற்றர்களுக்கு வாகன நெரிசல்
முள்ளிவாய்க்காலில் (Mullivaikkal) இடம்பெற்ற மே 18 தமிழின அழிப்பு நினைவேந்தலை முடித்துக்கொண்டு திரும்பிய மக்கள் அசம்பாவிதம் ஒன்றுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வீதியில் ஏற்பட்ட வாகன நெரிசலில் இருந்து மீள முடியாதபடி இருப்பதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இருந்து வெளியேறும் வழி முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு வீதியில் சந்தித்துக் கொள்ளும் போது இந்த வாகன நெருசல் ஏற்பட்டுள்ளது.
A35 வீதி
இருவழி பாதையான இந்த வீதி A35 வீதியில் மக்கள் நடந்து செல்வதிலும் கூட சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
அதாவது சிறிய தூரத்தை கடந்து செல்ல பல நிமிடங்கள் எடுத்துக் கொள்வதாக குறிப்பிடப்படகின்றது.
வெய்யில் அதிகமாக உள்ள இந்த சூழல் வயதானவர்களுக்கும் குழந்தைகளுக்கும் பாரிய அசம்பாவிதங்களை ஏற்படுத்தக்கூடிய அச்ச நிலையும் உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது.
செய்திகள் - நதுநசி
You may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |






