மனித உரிமைகள் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவிற்கு மேல் நீதிமன்றம் கொடுத்த உத்தரவு!
Colombo
SriLanka
Hejaaz Hizbullah
SriLankan lawyers
Human Rights Lawyer
By Chanakyan
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா (Hejaaz Hizbullah) மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மனித உரிமைகள் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவிற்கு எதிரான வழக்கு இன்று மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இனங்களுக்கிடையில் ஒற்றுமையை சீர்குலைக்க முயற்சித்த குற்றச்சாட்டில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா கைது செய்யப்பட்டு 20 மாதங்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
