ஹிஸ்புல்லாவிற்கு ஏற்பட்ட பேரிழப்பு : ஊடக பிரதானியை சாய்த்தது இஸ்ரேல்
லெபனான் (lebanon)தலைநகர் பெய்ரூட்டின் மத்திய பகுதியில் உள்ள கட்டிடத்தின் மீது இன்று(17) ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல்(israel) நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் உயர்மட்ட செய்தித் தொடர்பாளர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இரண்டு லெபனான் பாதுகாப்பு வட்டாரங்கள் ரொய்ட்டர்ஸிடம், ஹிஸ்புல்லாவின் ஊடக தலைவர் முகமது அஃபிஃப்(Mohammed Afif) ராஸ் அல்-நபாவின் சுற்றுப்புறத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டதாகக் தெரிவித்தன.
உறுதிப்படுத்தியது ஹமாஸ்
அத்துடன் அவர் கொல்லப்பட்டதை தன்னை இனம்காட்டாத ஒரு ஹிஸ்புல்லா அதிகாரி, அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் உறுதிப்படுத்தினார்.
இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் பாதுகாப்பு படை உடனடியாக எந்த கருத்தையும் வெளியிடவில்லை.
தாக்குதலில் அழிக்கப்பட்ட கட்டளை மையம்
ஞாயிற்றுக்கிழமை, தாஹியேவில்(Dahiyeh) ஹிஸ்புல்லா இலக்குகளுக்கு எதிரான வான்வழித் தாக்குதல்களை முடித்துவிட்டதாக இஸ்ரேல் படைத்துறை கூறியது. போர் விமானங்களால் தாக்கப்பட்ட இலக்குகளில் கட்டளை அறைகள் மற்றும் பிற உள்கட்டமைப்புகள் அடங்கும் என்று இராணுவம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |