அடர்த்தியான முடி வளர்ச்சிக்கு உதவும் செம்பருத்தி பூ... இவ்வாறு பயன்படுத்துங்கள்
பொதுவாக ஆண், பெண் என அனைவருக்கும் இருக்கும் மிகப்பெரிய பிரச்சினை தான் முடி உதிர்வு.
அந்தவகையில், முடி உதிர்வை நிறுத்தி அடர்த்தியான கூந்தல் வளர்ச்சிக்கு செம்பருத்தி பூ மிகவும் உதவுகின்றது.
செம்பருத்தி பூவை எப்படி பயன்படுத்துவது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
செம்பருத்தி பூ - 10
வெந்தயம்- 2 ஸ்பூன்
தயிர்- 2 ஸ்பூன்
கற்றாழை ஜெல்- 5 ஸ்பூன்
தேங்காய் எண்ணெய்- 1 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் செம்பருத்தி பூக்களை தண்ணீரில் கழுவிக் கொள்ளவும் அதன் காம்புகளை அகற்றி விடவும். பின் ஒரு மிக்ஸி ஜாரில் செம்பருத்திப் பூக்களை போட்டுவிட்டு ஊறவைத்த வெந்தயம், தயிர், கற்றாழை ஜெல் சேர்த்து அரைக்கவும்.
அடுத்து அதில் தேங்காய் எண்ணெய் சேர்த்து பேஸ்ட் போல் நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
தேங்காய் எண்ணெயை முதலில் முடியில் தடவி விட்டு பின்னர் இந்த ஹெயார் பக்கை தடவவும்.
இதற்கடுத்து 30 நிமிடங்கள் கழித்து சம்போ பயன்படுத்தாமல் அரிசி வடித்த கஞ்சி, அரிசி கழுவிய நீரை வைத்து முடியை அலசவும்.
இந்த ஹெயார் பக்கை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தினால் முடி உதிர்வு முற்றிலும் தடுக்கப்பட்டு முடி வளர்ச்சியை அதிகரிக்க முடியும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

